புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகத்தின் எதிர்நோக்கு
Rev. Fr. Guymar Felix Canisius Raj
Administrator
கடந்த காலங்களில் விண்வெளிகளின் அரசி (Our Lady of the Airways) ஆலயத்தில்
இயங்கி வந்த தழிழ்ச்சமூகம் வருகின்ற மே மாதம் 1ம் திகதியிலிருந்து
புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகமாக ரொறன்ரோ
உயர்மறைமாவட்டத்தின் அனுமதியுடன் அதே ஆலயத்தில் இயங்கவுள்ளது.
இப்புதிய பணியகத்தினூடாக யங் வீதியின் (Yonge Street) மேற்கு பக்கமாக
வாழுகின்ற தமிழ் கத்தோலிக்க மக்கள் தமது திருவருட்சாதனங்கள்
திருப்பலிகள் மற்றும் அனைத்து ஆன்மீகத் வேவைகளையும்
விண்வெளிகளின் அரசி ஆலயத்தில் நிறைவேற்றலாம்.